கருணாநிதி மறைவு.. பெட்ரோல் பங்குகள் நாளை ஒரு நாள் மூடப்படும்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இதைத் தொடர்ந்து திரையரங்குகள் காட்சிகளை ரத்து செய்து அறிவித்தன.

மேலும், சென்னையில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளில் தங்களுடைய வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பக் குவிந்ததால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று இரவு பெட்ரோல் பங்குகளில் மேலும் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications