ஒகேனக்கல் அருவிகளில் “ஒல்லியாய்” கொட்டும் தண்ணீர் – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
ஒகேனக்கல்: காவிரியில் தண்ணீர் குறைந்துள்ளதால் ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளது.
கோடை விடுமுறை காலத்தில் ஒகேனக்கல்லுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டலுவுக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் உள்ளது. இங்கு தினமும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோடை விடுமுறை காலத்தில் ஒகேனக்கல்லுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த கால கட்டத்தில் ஒகேனக்கல் பிசியாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வருவது குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் பல பகுதிகளில் தண்ணீரின்றி பாறைகள் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றன. ஒகேனக்கல்லில் உள்ள முக்கிய அருவிகளில் மிக குறைந்தளவில் மட்டும் தண்ணீர் கொட்டி வருகிறது. குறிப்பாக குளிக்கும் அருவி மற்றும் சினி பால்சில் சிறிய ஓடைபோல் தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் தண்ணீர் வரத்து குறைந்ததால் கோடை விடுமுறை காலத்தில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் செய்யும் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications