வெள்ளப்பெருக்கு எதிரொலி.. தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!
வெள்ளப்பெருக்கு காரணமாக தலையணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: வெள்ளப்பெருக்கு காரணமாக தலையணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தலையணை அமைந்துள்ளது. இங்கு ஓடும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தலையணைக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். வறட்சியின் காரணமாக மூடப்பட்டிருந்த தலையணை கடந்த செப் 2ம் தேதி திறக்கப்பட்டது.
இதையடுத்து தலையணையில் சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர். இந்நிலையில் அதிகாலை முதல் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்து வருவதால் அருவிகள் மற்றும் அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் தலையணையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை மூழ்கியப்படி கற்றாற்று வெள்ளம் பாய்ந்து செல்வதால் பாதுகாப்பு கருதி தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் கயிறு கட்டி ஆற்றில் தடுப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் தலையணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் தடையை மீறி ஆற்றில் இறங்கி விடாமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications