For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

களக்காடு தலையணையில் திடீர் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு மலைப்பகுதியில் சாரல் பெய்து வருவதால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு புலிகள் காப்பகப் பகுதியில் தலையணை அமைந்துள்ளது. இங்கு ஓடும் பச்சையாற்றில் குளிப்பதற்காக வெளிமாவட்டத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.

காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சில தினங்களாக களக்காடு பகுதியில் காரணமாக சாரல் பெய்து வருகிறது. அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் தடுப்பணைகள் மூழ்கின.

Kalakadu

தலையணைக்கு செல்லும் வழியெங்கும் வரை வெள்ளம் செல்கின்றது. இதனால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இன்றும் லேசான சாரல் பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் தணியவில்லை. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்றும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு தான் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது போல் அதை சுற்றியுள்ள பகுதிகளான கோழிக்கால், குளிராட்டி, நெட்டேரியங்கால், முதலிருப்பான், செங்கல்தேரி போன்ற பகுதிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் களக்காடு பச்சையாறின் அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

English summary
heavy rains in Kalakadu forest areas has lead to a sudden discharge of water in forest rivers. Forest officers decision to ban tourists for bathing in the Kalakadu Thalayanai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X