அய்யோ.. தென்காசியில பிறந்தவங்க கொடுத்துவச்சவங்க.. குற்றாலமும்.. குண்டாறும் எப்படி மயக்குது பாருங்க
தென்காசி: தென்காசியில பிறந்தவங்க கொடுத்துவச்சவங்கன்னு சும்மாவா சொன்னாங்க,,,அய்யோ என்னா ஒரு மழை,, என்னா ஒரு காற்று.. அற்புதமான மழை சாரலோடு,, குற்றால அருவில் வெள்ளியை உருக்கும் வெள்ளம் ஆர்ப்பரித்துக்கொட்டுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் குண்டாறு அணை நிரம்பியதால் செங்கோட்டை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான தென்காசி அருகே உள்ள குண்டாறு அணை தான் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் மிகச்சிறிய அணையாகும். இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 36.10 அடியாகும்.
மழை காலங்களில் முதலில் நிரம்புவது குண்டாறு அணை இதன் மொத்தக் கொள்ளளவு 25000 கன அடியாகும் இந்த அணையின் மூலம் சுமார் 1100 ஏக்கரில் விவசாய பரப்பளவு பாசன வசதி பெறுகிறது.

தண்ணீர் வரத்து இல்லை
மேலும் இந்த அணையில் இருந்து செங்கோட்டை செல்லும் நீரினை ஆதாரமாக கொண்டு செங்கோட்டை நகருக்கு குடிநீர் மறைமுகமாக நிலத்தடிநீர் ஆராதமாகவும் உள்ளது. இந்நிலை கடந்த மாதங்களில் தண்ணீர் இல்லாமால் அணை வறண்டு காணப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி
இந்நிலையில் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகின்றது இதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்தால் சிறிய அணையான குண்டாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில் இன்று முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டியது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாய பணிகளை மேற்கொள்ளலாம்
தற்போது 67 கன அடி நீர்வரத்து உள்ளது உபரியாக அதே 67 கன அடி நீர் வெளியேறுகிறது. மேலும் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் குளிக்க தடை
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுத்துவருவதால் கேரளாவை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுவதால் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications