கொட்டும் அருவி... விடுமுறை தினம்... குற்றாலத்தில் கும்மாளம் போடும் சுற்றுலாப் பயணிகள்!
நெல்லை: விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 8ஆம் தேதி காலைமுதல் 9ஆம் தேதி காலை வரை தடை விதிக்கபட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு அருவிக்கரையில் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.
ஆனால், 9ஆம் தேதி தண்ணீர் வரத்து கொஞ்சம் குறைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல்துறையினர் அனுமதியளித்தனர்.இதனைத் தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை மற்றும் சனி ,ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குற்றாலம் மெயின் அருவிகளில் குளித்தும் குண்டாறு நீர்தேக்கத்தில் படகு பயணம் மேற்கொண்டும் வருகின்றனர்.
அருவிகளில் ஆர்ப்பாரித்து கொட்டும் நீரில் ஆனந்தமாய் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தவண்ணம் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications