ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது ஜெ. மரணத்திற்கு நீதி விசாரணை கேட்கலையே.. ஏன்? - டி.ஆர்
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணைக் கேட்கும் ஓ.பன்னீர் செல்வம், அவர் முதல்வராக இருந்த போது கேட்கத் தவறியது ஏன் என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலம் கடந்து நீதி விசாரணை கேட்பதாக லட்சிய திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். அவர் முதல்வராக இருந்த போது நீதி விசாரணைக் கேட்காதது ஏன் என்றும் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ஜெயலலிதா மரணம் பற்றி இப்போது வாய் திறக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இத்தனை நாட்கள் மவுனம் காப்பது ஏன் என்று கேட்டுள்ளார்.
ஓபிஎஸ் அணியினரைப் பார்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள டி.ராஜேந்தர், இப்போது உண்ணாவிரதம் இருப்பது ஏன் என்று கேட்டுள்ளார்.

ஓபிஎஸ் அமைதி
அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அமைதியாக இருந்தது ஏன்? இப்போது திடீர் என்று மவுனம் கலைந்தது ஏன்?

நீதி விசாரணை கேட்கலையே
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நீதி விசாரணை ஏன் கேட்கவில்லை. காலம் கடந்து பன்னீர்செல்வம் நீதிவிசாரணை கேட்பது ஏன்? காலம் கடந்து ஞானம் வந்து விட்டதா என்றும் கேட்டுள்ளார்.

வாலை பிடிப்பதா?
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதும் 60 நாட்கள் முதல்வராக இருந்த போது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒ.பன்னீர் செல்வம், இப்போது ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்பது தும்பை விட்டு வாலை பிடிப்பது போல உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சூரிய நமஸ்காரம்
தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம், இது எந்த சூரியனுக்கான காரிய நமஸ்காரம் என்றும் கேட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications