அதை எண்ண எண்ண எண்ண நெஞ்சு கொதிக்குதய்யா... ! டி.ஆர் கண்டன கவிதை
ஓபிஎஸ் அணியைக் கண்டித்து டி. ராஜேந்தர் கண்டன கவிதை எழுதியுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் அணியைக் கண்டித்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கண்டன கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையில் ஜெயலலிதா மரணம் பற்றி கேள்வி எழுப்பிய பலரையும் சாடியுள்ளார்.
அன்றைய முதல்வர் அம்மா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதி முதல் தான் வகித்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை பன்னீர் செல்வம் கவர்னரிடம் கொடுத்த பிப்ரவரி 5ஆம் தேதி வரை அந்த 137 நாட்கள் அதில் நடந்தது என்ன? என்ன? என்ன?
அதை எண்ண எண்ண எண்ண நெஞ்சு கொதிக்குதய்யா...
இந்த இடைப்பட்ட நாட்களில் ஓ. பன்னீர் செல்வம் அணி...
ஒருங்கிணைந்து செய்தனர் என்ன பணி?

மார்ச் 2ஆம் தேதி அம்மா மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்று முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் அவர்கள் கொடுத்திருக்கிறார் ஒரு பரபரப்பு பேட்டி
சரி இப்போதுதான் குற்றவாளிகளை நெருங்கினீர்கள்...
அப்படி என்றால் இத்தனை நாட்கள் எங்கே போய் உறங்கினீர்கள்...?
ஏன் குரல் கொடுக்கத் தயங்கினீர்கள்...?
இப்ப கொதிக்கறீங்களே அய்யா பி.எச். பாண்டி...
அப்ப, அப்பல்லோவில் அம்மா இருந்தப்ப ஏன் குதிக்கவில்லை தாண்டி?
ஏன் தொண்டர்களை விடவில்லை தூண்டி...?
மர்மங்களை ஏன் எடுக்கவில்லை தோண்டி...?
அப்போலோ மருத்துவமனையில் அம்மா நல்லாதான் இருக்காங்க. அப்படின்னு
அய்யா பொன்னையா... நீர்தான் சொன்னையா... இப்ப சொல்றது என்னையா?
ஆக கொக்கு தலையில வைக்கப் பாக்குறீங்க வெண்ணெய்யா...
இப்ப நீதி விசாரணை வேணும்னு அய்யா ஓ.பி.எஸ் அணி எம்.பிக்கள் குதிக்கறீங்களே எம்பி...
அன்றைக்கு ஏன் அப்போலோவில் நீட்டி விட்டீர்கள் கம்பி...
அம்மாவுக்கு நடந்ததை எண்ணி ஏன் கொதிக்கவில்லை உங்க கும்பி.. (வயிறு)...
அப்போலோவில் அம்மா நோய்வாய்பட்டபோது
பன்னீரய்யா தான் தற்காலிக முதல்வர்
அப்புறம் அம்மா மறைவையொட்டி அவர்தான் முதல்வர்
இப்ப அருந்தவப் புதல்வரா இருக்கிறப்ப கேட்கிறாரோ நீதி விசாரணை...
அப்ப அவரு முதல்வரா இருந்தப்ப ஏன்யா செய்யல யோசனை...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications