மின்கட்டண உயர்வை ரத்து செய்ய திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் முதல்வருக்கு கடிதம்!
திருப்பூர்: மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கமான டீமாவின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள மின்கட்டண உயர்வு என்பது பின்னலாடை உற்பத்தித் தொழிலுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
நூல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த திருப்பூர் தொழில்துறை தற்போது சீராக நடைபெற்ருக்கொண்டிருக்கும் தருணத்தில் இந்த மின்கட்டண உயர்வு தொழில்துறையினருக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.
அபரிதமான இந்த மின் கட்டண உயர்வால் பின்னலாடைத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வை அறிவித்து, அமல்படுத்துவதை பின்னலாடைத் தொழில்துறையினர் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் உள்ளனர். இதனால் பின்னலாடை உற்பத்தி கடுமையாக பாதிக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும். பின்னலாடைத் தொழில் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
எனவே, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications