Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிராபிக் ராமசாமிக்கு மனசு நிறைய கோபம்தான்.. ஆனால் கருணாநிதியை எப்படி பாராட்டுகிறார் பாருங்கள்!

மெரினாவில் சமாதி கூடாது என்கிறார் டிராபிக் ராமசாமி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மெரினாவில் சமாதிகள் அமைப்பதை மட்டுமே எதிர்க்கிறேன்..கருணாநிதியை அல்ல-டிராபிக் ராமசாமி- வீடியோ

    சென்னை: கருணாநிதி சமாதியை அடக்கம் செய்யக்கூடாது என்று அதற்கு ஒரு மனுவையும் டிராபிக் ராமசாமி போடபோய், அதற்கு தலைமை நீதிபதி அமர்வோ முறைப்படி மனு தயாரித்து வாருங்கள் என்று கூறி தள்ளுபடியும் செய்துவிட்டது.

    இதனால் நிலைகுலைந்த டிராபிக் ராமசாமி, புதிய மனு தயாரிக்க போதிய நேரமும் இல்லாமல், கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதை தாங்கிக் கொள்ளவும் முடியாமல் மனம்புழுங்கி கிடந்தார்.

    Traffic Ramasamy appreciate Karunanidhi

    கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதில் மற்றவர்கள் உடன்பட்ட நிலையில், இவர் மட்டும் ஏன் தனித்து இருக்கிறார்?. இதை அவரிடமே கேட்டோம். பொறிந்து தள்ளி விட்டார் மனிதர்.

    கேள்வி: மெரினாவில் அடக்கம் செய்வதில் உங்களுக்கு என்னதான் பிரச்சனை ஐயா? உங்க வழக்கின் சாராம்சம்தான் என்ன?

    முதலில் இந்த மீடியாக்களே எனக்கு எதிராக இப்போது திரும்பியுள்ளது. திமுக தரப்பு ஆட்களை எனக்கு எதிராக திசை திருப்பப்பட்டுள்ளது. அதற்கான கொலைமிரட்டல்கள் எனக்கு இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன. மெரினா கடற்கரை என்பது மக்களுக்காக இருக்க வேண்டுமே தவிர சமாதியாக இருக்க கூடாது. இதுதான் என் வழக்கின் சாராம்சம். இது ஜெயலலிதாவை அடக்கம் செய்தபோதே வழக்கும் தொடுத்தேன். இதுபோல 3 வழக்குகளை நான் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வது குறித்து போட்டுள்ளேன். இப்போது கலைஞரை அடக்கம் செய்ததே தவறு. நான் போட்ட வழக்கை வாபஸ் வாங்கிவிட்டதாக சட்டவிரோதமான தகவல்களை வேறு பரப்பி வருகிறார்கள். இது சட்டவிரோதமானதும்கூட.

    கேள்வி: திமுகமேல் அப்படி என்ன கோபம்?

    திமுகமேல் எந்த கோபமும் இல்லை. கருணாநிதியை மட்டும் நான் சொல்லவில்லை, ஒரு குற்றவாளிக்கு மெரினாவில் சமாதி அவசியமா? என்று கேட்டுதான் நான் ஜெயலலிதா சமாதி குறித்தும் வழக்கு போட்டேன். கடற்கரையில் எந்த சமாதியும் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. மகாத்மா காந்தியின் உறவினரும், மிகச்சிறந்த அரசியல்வாதியும், தமிழக முதலமைச்சராக இருந்தவருமான ராஜாஜிக்கே நினைவு மண்டபடம் மெரினாவில் இல்லை. கிண்டியில்தானே இருக்கு? ஏன் கருணாநிதியை கிண்டிக்கு கொண்டு கொண்டு போயிருக்க வேண்டியதுதானே? அங்கே என்ன குறைச்சல்? பீச் என்ன எல்லோருக்கும் சமாதியா?

    கேள்வி: திமுகமேல் கோபம் இல்லை என்றால் யார் மீதுதான் உங்களுக்கு கோபம்?

    ஏற்கனவே அரசு 144 தடை உத்தரவு மெரினாவில் போட்டிருக்கு. 5 பேர் கூடினாலே அங்கு சட்டப்படி குற்றம். அப்படி இருக்கும்போது ஆயிரக்கணக்கான பேர் மெரினாவில் உட்கார்ந்து கொண்டு போராடினது சரியா? ஆசியாவிலேயே 2-வது பெரிய கடற்கரை நம்ம பீச். இது எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்? மீட்டிங் போடுவதற்காகவே சீரணி அரங்கம்-ன்னு ஒன்று கட்டினார்கள். அது இப்போது எப்படி இருக்கு? நீதிபதி என் வழக்குகளை தவறு என்கிறார். அப்படி என்ன தவறா வழக்குபோட்டுட்டேன்?

    கேள்வி: உங்களுடன் வழக்கு போட்ட மற்ற நால்வரும் கேஸை வாபஸ் வாங்கிட்டாங்கதானே?

    கருணாநிதி விவகாரத்தில் என்னுடன் சேர்ந்து வழக்கு தொடுத்த பாமக உள்ளிட்டவர்கள் வழக்கிலிருந்து பின்வாங்கியதற்கு உள்நோக்கம்தான் காரணம். என்னோடு சேர்ந்துதானே மெரினாவில் சமாதி வேண்டாம் என்றுதானே எல்லோரும் கேஸ் போட்டாங்க? அப்புறம் ஏன் வாபஸ் வாங்கிடறாங்கன்னா, மெரினாவில் அடக்கம் செய்வது முதலில் தவறாக இருந்தது சிறிது நேரத்தில் அவர்களுக்கெல்லாம் சரியான ஒன்றாகிவிட்டதா? அதனால் தயவுசெய்து மக்களை வைத்து எந்த அரசியல்வாதியும் அரசியல் செய்யாதீர்கள். தயவு செய்து மக்களை காப்பாற்ற வாங்க. எந்த சட்டத்தை போட்டாலும் மதிக்கமாட்டோம், அதை மீறிதான் செயல்படுவோம் என்று செயல்பட்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். இனியாவது இவர்கள் மக்களை பார்க்க வேண்டும்.

    கேள்வி: கருணாநிதிக்கு சமாதிக்கு கூடாது... நீதிபதி சரியில்லை.. சட்டம் சரியில்லை.. அரசியல்வாதிகள் சரியில்லை... அதெல்லாம்
    போகட்டும்... கலைஞரை பற்றி என்ன சொல்ல நினைக்கிறீங்க?

    தமிழகம் ஒரு தலைசிறந்த தேசிய தலைவரை தற்போது இழந்து தவித்து நிற்கிறது. இந்த நேரத்தில் அவர் தமிழக மக்களுக்கு செய்த பல்வேறு காரியங்களை நினைவுகூற வேண்டும். அவரது ஆட்சியின்போது, பெண்களுக்கு சொத்துரிமை வாங்கி கொடுத்தது, சமுதாய கூடங்கள் கட்டியது, அனைத்து மதமும் ஒன்று என்று வலியுறுத்திய சமத்துவபுரம் போன்றவை எல்லாம் அவரது நற்காரியங்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டுகள். குறிப்பாக இந்தி திணிப்பதை தன் இறுதி வரை எதிர்த்து கொண்டிருந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது." என்றார்.

    கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்.. சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்.. டிராபிக் ராமசாமியின் கருணாநிதி குறித்த கருத்துக்கள் சிம்ம்ப்ளி சூப்பர்ப்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+