அதெப்படி கிளைமாக்ஸில் “ஜோக்கரை”க் கொல்லலாம்?... டிராபிக் ராமசாமி கோபம்
சென்னை: ஜோக்கர் படத்தின் முதல் பாதி முழுவதும் தன் கருத்துக்களைப் பிரதிபலிப்பது போல் இருப்பதாகவும், ஆனால் அப்படத்தின் கிளைமாக்ஸில் தனக்கு உடன்பாடில்லை என்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி விமர்சித்துள்ளார்.
ராஜூ முருகன் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரிலீசான தமிழ் படம் ஜோக்கர். பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில், ஜோக்கர் படம் குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் தனது கருத்துக்களைப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கிளைமாக்ஸ்...
அதில் அவர், "ஜோக்கர் படம் முதல் பாதி முழுவதும் என் கருத்துகளைப் பிரதிபலிப்பதுபோல் உள்ளது. ஆனால், படத்தின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை.

அச்சத்தை உருவாக்கும்...
இதை நான் ராஜுமுருகனிடமே அலைபேசியில் கூறினேன். சமூகசேவை செய்யும் கதாநாயகன் இறப்பதுபோல் காட்டுவது மக்களிடையே சமூகசேவையில் இறங்க ஓர் அச்சத்தை உருவாக்கும்.

அஞ்ச வேண்டியதில்லை...
நான் பல அரசியல்வாதிகளை எதிர்க்கிறேன். இன்னும் நான் இறக்கவில்லையே? தனிமனிதக் கொள்கையுடைய யாரும் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

மன்னர்மன்னன்...
ஜோக்கர் படத்தில் மன்னர்மன்னன் என்ற கதாபாத்திரம் தான் நாயகன். அவர் தன்னை ஜனாதிபதி எனக் கூறிக்கொண்டு செய்யும் நடவடிக்கைகள் தான் படத்தின் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications