முதல்வரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? நாளை தெரியும்
முதல்வர் மற்றும் அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதைச் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நாளை அறிவிக்க உள்ள
சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது நாளைக்குத் தெரியும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரைத் தகுதி இழப்பு செய்யக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். மேலும், தமிழக அரசை முடக்கி வைக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் முதல்வர் பெயர் இடம்பெற்றுள்ளது என்று டிராபிக் ராமசாமி அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் மீது ஊழல் மற்றும் வருமான வரித்துறை வழக்குகள் உள்ளன. எனவே, தமிழக அரசை முடக்கி வைக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கேட்டுக் கொண்டார்.
ஊழல் குற்றச்சாட்டுள்ள முதல்வர், விஜயபாஸ்கர், காமராஜ் ஆகிய அமைச்சர்கள் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரியிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications