ஜெ. பேனர்.. நடு ரோட்டில் படுத்து 'டிராபிக்'கை ஸ்தம்பிக்க வைத்த ராமசாமி.. பணிந்தது போலீஸ்!
சென்னை: சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனர்களை அகற்றக் கோரி நடு ரோட்டில் படுத்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. அவரை சமாதானப்படுத்த முயன்று தோல்வி அடைந்த போலீஸார், வேறு வழியில்லாமல், பேனர்களை அகற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
நேற்று கடற்கரை காமராஜர் சாலை முழுவதும் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. முதல்வர் ஜெயலலிதாவின் பேனர்கள் இவை. அதிமுகவினர் இதை வைத்திருந்தனர். ஆனால் முறையான அனுமதி பெறாமல் இவை வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அங்கு வந்தார் டிராபிக் ராமசாமி. சாலையில் திடீரென படுத்தார். உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் இப்படியே படுத்திருப்பேன் என்று கூறி விட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் சமாதானப்படுத்திப் பார்த்தனர். ஆனால் அவர் சமாதானமாகவில்லை.
வாகனங்கள் சாலையில் தேங்க ஆரம்பித்தன. இதைப் பார்த்த போலீஸார் வேறு வழியில்லாமல் பேனர்களை அகற்ற ஆட்களை வரவைத்தனர். அவர்கள் வந்து பேனர்களை அகற்றினர். அதன் பின்னரே ரோட்டிலிருந்து எழுந்து சென்றார் டிராபிக் ராமசாமி.
பேனர்கள் அகற்ற்பபடுவதை சாலையில் உட்கார்ந்தபடி அவர் கண்காணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications