நிபந்தனையில்லாமல் ஜெ.வுக்கு தந்த ஜாமீனை ரத்து செய்க- டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை: மிகப் பெரிய தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஜாமீன் அளித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்று அவர் விடுதலையானார்.

இந்த நிலையில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்குப் போட்டுள்ளார். அதில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கும் முன் தமிழக அரசின் கருத்து கேட்கப்படவில்லை. ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோர் பல மாதம் சிறையில் இருந்த பிறகே ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் ஜெயலலிதாவுக்கோ எந்த நிபந்தனையும் இல்லாமல் ஜாமீன் தரப்பட்டுள்ளது. எனவே இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் இந்த மனு பரிசீலனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications