விழுப்புரம் அருகே ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் மோதி விபத்து
Subscribe to Oneindia Tamil
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் அருகே ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சின்னசேலம் அருகே தென் பொன்பரப்பி என்ற இடத்தில் ஆளில்லா லெவல் கிராசிங் உள்ளது. இந்த கேட்டில் மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் கடக்க முயன்ற போது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

சேலத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் டிராக்டரின் பின்புறம் மோதியதாக தெரிகிறது. டிராக்டர் என்ஜினிலிருந்து டிப்பர் மட்டூம் தனியே கழன்று சென்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.













Click it and Unblock the Notifications