சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண்ணுக்கு கால் முறிவு: குழந்தை பலி
சென்னை: சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த ரயிலை விட்டு இறங்கும்போது தவறி விழுந்ததில் பிளாட்பாரம் மற்றும் ரயிலுக்கு இடையில் ஒன்றரை வயது குழந்தை விழுந்து பலியானது. காப்பாற்றப்போன தாயும் படுகாயமடைந்ததில் அவருக்கு கால் முறிந்தது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் படுகாயமடைந்தனர்.
சென்னை, கே.கே. நகரில் வசிப்பவர் சிங்காரவேலன், 37. இவரது மனைவி லட்சுமி,32. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஏகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை என்பதால், சிங்கார வேலன் குடும்பத்துடன் திருவையாறு சென்றிருந்தார்.

நேற்று இரவு மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்பினர். இன்று காலை, ரயில் சென்னை, மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வந்தது. வழக்கமாக எழும்பூர் செல்லும் ரயில்கள் மேற்கு மாம்பலத்தில் சில நிமிடங்கள் நின்று செல்லும்.
சிங்கார வேலரன், கே.கே. நகரில் வசிப்பதால், மேற்கு மாம்பலத்தில் இறங்கி அங்கிருந்து வீட்டுக்கு செல்ல உத்தேசித்திருந்தார். ரயில், மாம்பலம் ரயில் நிலையத்தை நெருங்கியது. ரயில் மெதுவாக வேகத்தை குறைத்தபோது, லட்சுமி, கைக்குழந்தையுடன் ரயிலில் இருந்து வேகமாக இறங்கியுள்ளார்.
இப்போது கால் இடறி, லட்சுமி, கீழே விழுந்ததில் அவர் கையில் இருந்த பெண் குழந்தை தவறி பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தது. இதில் குழந்தை நசுங்கி உயிரிழந்தது.
குழந்தையைக் காப்பாற்றப் போன தாய் லட்சுமியும், ரயிலில் சிக்கினர். இதில் லட்சுமிக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவரது கால் முறிந்தது. உடனடியாக லட்சுமி சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில், மாம்பலத்தில் நடந்த இந்த கோரச் சம்பவம் ரயிலில் வந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications