சார், அடுத்து தாம்பரம் வருது, முழிச்சிக்கோங்க ப்ளீஸ்... இனி ரயிலில் நிம்மதியா தூங்க “வேக் அப் கால்”!
சென்னை: ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனி தங்களுடைய தூக்கத்தினை எந்தவித பதட்டமும் இல்லாமல் மேற்கொள்ளலாம். ஏனெனில், எங்கே ஸ்டேஷனை விட்டுவிடுவோமோ தூக்கத்தில் என்ற கவலையைப் போக்க புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளது இந்திய ரயில்வே.
"வேக் அப் கால்" என்னும் இந்த திட்டத்தின்படி தங்களுடைய ஸ்டேஷனை அடைவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ரயில்வே நிர்வாகம் மூலமாக செல்போன் அழைப்பினைப் பெறுவார்கள். இதனால் எவ்வித பதட்டமும் இல்லாமல் தங்களுடைய பயணத்தினைத் தொடங்கலாம்.

ஐஆர்சிடிசி மற்றும் பாரத் பிபிஓ ஆகிய நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ள இந்த வாய்ஸ் கால் சேவையினை ரயில்வே என்கொயரி 139இன் மூலமாக பெற முடியும்.
"பி.என்.ஆர் நம்பர், ஸ்டேஷன் பெயர், எஸ்டிடி கோட் ஆகியவற்றைப் பதிவு செய்வதன் மூலமாக இந்த அழைப்பினைப் பெற முடியும்" என்று ரயில்வேயின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
139 என்ற ரயில்வே அவசர சேவை எண் ஆண்டு முழுவதும் அனைத்து நேரமும் இயங்கக் கூடியதாகும். இந்த எண்ணை தொடர்பு கொண்டு, ரயில் புறப்படும் அல்லது போய் சேரும் நேரம், ரயில் தற்போதுள்ள இடம், அதன் கட்டணம் ஆகியவற்றை பெற முடியும்.
இந்த சேவை எண் மூலம் உணவையும் புக் செய்ய முடியும். தக்கல் டிக்கெட் நிலவரம், டிக்கெட் ரத்து செய்தல், பணம் திரும்பப் பெறும் விதிமுறைகள், பிளாட்பார்ம் நிலவரம் போன்றவற்றையும் 139 சேவையும் மூலம் பெற முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் இனிமேல் ஹையோ ஸ்டேஷன் போய்டுமோ என்ற பதற்றம் இல்லாமல் ஜாலியா தூங்கலாம்!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications