பொங்கல் முன்பதிவு ரயில் டிக்கெட்டுகள் ஹவுஸ்புல்
திருநெல்வேலி: பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு வருவோருக்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு சிலநிமிடங்களில் முடிவடைந்தது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு வருகின்றனர். இந்த பண்டிகை காலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் பண்டிகை அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை எடுக்க வசதியாக உள்ளது. ஏனெனில் போகி பண்டிகை வரும் ஜனவரி 13ந் தேதி திங்கள் கிழமையும், பொங்கல் பண்டிகை 14ந் தேதி செவ்வாய் கிழமையும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முன்புள்ள இரு நாட்களும் பொது விடுமுறை என்பதால் அவர்கள் எளிதாக ஊர் வந்து விடுவார்கள்.
தென் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் பொங்கலுக்கு மொத்தமாக 5 நாட்கள் விடுமுறை எடுத்து வர வாய்ப்பு உள்ளது. பொங்கலுக்கான முன்பதிவு இரு நாட்களுக்கு முன்பு துவங்கி விட்டது. கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications