வள்ளுவரே சொல்லிருக்கார்டா.. பொய் சொல்.. பெண் கான்ஸ்டபிளிடம் கெஞ்சிய அருமைநாயகம் - ஆடியோ
நெல்லை: பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ராமு, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரிடம் பயிற்சி எஸ்.ஐ அருமைநாயகம் போனில் பேசி இருக்கிறார். 16 நிமிடங்கள் அவர்களது உரையாடல் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
அம்பாசமுத்திரம் அனைத்து காவல் மகளிர் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த ராமு கடந்த 9ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமான எஸ்.ஐ. அருமை நாயகம் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார் ராமு. அந்த புகாரின் பேரில் உயரதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போகவே உயிரை மாய்த்துக் கொண்டார் ராமு.

ராமு தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு ராமுவிடம் அருமைநாயகம் கெஞ்சியுள்ளார். நல்லது நடப்பதற்காக பொய் சொல்லலாம் என்று திருவள்ளுவரே கூறியுள்ளார் என்று வள்ளுவரை சாட்சிக்கு அழைத்துள்ளார் அருமை நாயகம்.
எனக்காக நீ பொய் சொல்லி காப்பாற்று என்று கெஞ்சிய அவர், நெருங்கி பழகியதை எல்லாம் வேறு விதமாக மாற்றி கூறச் சொல்லி பேசிய ஆடியோ இப்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப் ஆடியோ :
ராமு: நான் என்ன பேசவேண்டும் என்று தெரியவில்லை
அருமைநாயகம்: இன்றாவது ஒரு நாள் எனக்காக பேசு. என்னை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் ஒருவார்த்தை எனக்காக பேசு. என்னை இன்று வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். இன்று கூட என்னை அரஸ்ட் செய்யலாம். என்னை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா உனக்கு. மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொன்னால் கூட அதை போலீஸ் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ராமு: அப்படி என்றால் எதற்காக புகார் கொடுத்தாய் என்று என்னிடம் போலீஸ் அதிகாரிகள் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?
அருமைநாயகம்: இன்று ஒரு நாள் என்னை காப்பாற்ற உனக்கு வழி இருக்கிறது. அதைவிட்டுவிட்டால் யார் நினைத்தாலும் என்னை காப்பாற்ற முடியாது. கடவுளே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. இரவு முழுவதும் தூங்காமல் சட்டபுத்தகத்தைப் படித்துள்ளேன். நாங்கள் இருவரும் சாதாரணமாக பேசிப்பழகினோம். அது பலாத்காரம் செய்த குற்றமாகுமோ என்று நினைத்து விட்டேன் என்று நீ சொல்லு. நான் எல்லாவற்றுக்கும் துணிந்துதான் செல்கிறேன். அம்மா செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். புகாரில் நான், உன் வீட்டுக்கு வந்திருப்பதாக சொல்லி இருக்கிறாயா, ராஜபாளையத்துக்கு சென்றதை எழுதி இருக்கிறாயா?
ராமு: ஆமாம்.
அருமைநாயகம்: வீட்டுக்கு வந்ததை புக் வாங்க வந்ததாக சொல். ராஜபாளையத்துக்கு சென்றது கோயிலுக்கு சாமி கும்பிட சென்றோம் என்று சொல். அங்கு குளித்து விட்டு உடை மாற்ற லாட்ஜிக்கு சென்றோம் என்று சொல். மெமரி கார்டு இருப்பதாக புகாரில் எழுதி இருக்கிறாயா
ராமு: அதை எழுதவில்லை.
அருமைநாயகம்: வேறு என்ன எழுதி இருக்கிறாய்
ராமு: அகஸ்தியர் அருவிக்கு அழைத்து சென்றதாக சொல்லி இருக்கிறேன். அங்கு கோயிலில் என்னை திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்தார் என்று புகாரில் எழுதி இருக்கிறேன்.
அருமைநாயகம்: இன்றோடு என் வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைக்கிறேன். கற்பழிப்பு குற்றத்தை மட்டும் சொல்லாதே. நான் உன் மீது நல்லப்படியாக சொல்வேன். உனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனென்றால் நீ பெண்.
ராமு: அந்த சம்பவம் உண்மை தானே
அருமைநாயகம்: திருவள்ளூவர் கூட நன்மைக்காக பொய் சொல்லலாம் என்று சொல்லி இருக்கிறார். நம்முடைய ஐ.பி.சி கூட சொல்லி இருக்கிறது.
ராமு: நான் இல்லை என்று சொன்னால் என்ன நம்பிக்கையில் இருக்க முடியும்.
அருமைநாயகம்: உன்னை எந்தக்காலத்திலும் கைவிடமாட்டேன். எனக்கு உதவி செய்த உன்னை மறக்க மாட்டேன். என்மீது உள்ள நம்பிக்கையில் சொல். உனக்குத் தான் மெமரி கார்டு இருக்கிறதே. நான் கைவிட்டுவிட்டால் நீதிமன்றம் மூலம் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். நீ நல்லா இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இப்போது இரண்டு பேரும் சமாதானமாக சென்று விட்டோம். நீ சொல்லும் ஒரு பொய்யால் என்னுடைய வாழ்க்கை எங்கயோ போய்விடும். இல்லை என்றால் பாதாளத்துக்கு போய்விடும்.
ராமு: நான் மீண்டும் புகார் கொடுக்க முடியுமா
அருமைநாயகம்: முருகன் சாரே எல்லாம் சொல்லிவிட்டார். கற்பழிப்பு குற்றம் நடைபெறவில்லை என்று மட்டும் சொல்லுடா. இன்று மட்டும் எனக்காக பொய் பேசு.
ராமு: பேசுரேன்.
அருமைநாயகம்: எனக்காக சொல்லுவியா.... எமர்ஜென்ஸி என்றால் அந்த செல்போன் நம்பரில் பேசு. ராமு நல்ல பெண் என்று நான் சொல்கிறேன். நீ கொடுக்கும் ஸ்டேட்மெண்டும், நான் கொடுக்கும் ஸ்டேட்மெண்டும் ஒன்று போல இருந்தால் எந்த பிரச்னையும் இருக்காது.
ராமு: மேல்நடவடிக்கை தேவையில்லை என்ற வார்த்தை மட்டும் போதாது.
அருமைநாயகம்: என் மீது மூன்று வகையான நடவடிக்கை எடுக்க உள்ளார்கள். டிஸ்மிஸ் வரை போய்விடும்.
ராமு: என் மீதும் நடவடிக்கை எடுப்பார்களே
அருமைநாயகம்: உன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
ராமு: ம்...
அருமைநாயகம்: நான் என்ன காரணத்துக்காகவும் மாற மாட்டேன். கரெட்டா சொல்லு. உன்மை நம்பிதான் இருக்கேன் என்பதாக அந்த ஆடியோ முடிகிறது.
ராமுவை நம்பியிருப்பதாக கூறிய அருமைநாயகம் கடைசியில் ராமுவை ஏமாற்றிவிட்டார். அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் ராமு. ராமுவின் மரணத்திற்கு காவல்துறை உயரதிகாரிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications