கிருஷ்ணகிரி: ரயிலில் இருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை தற்கொலைக்கு முயற்சி
இளைஞரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட திருநங்கை தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் இருந்து இளைஞரை தள்ளிவிட்ட திருநங்கை, போலீஸ் விசாரணைக்கு பயந்து அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் தாலுகா கின்னப்பள்ளி தாட்டிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யநாராயணா. இவரது உறவினர்களான வீரபாபு, பாப்பண்ணா துரா, சாமிதுரா ஆகியோருடன் சத்யநாராயணா ராஜமுந்திரியில் இருந்து, திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தார்.

ரயில் கிருஷ்ணகிரி அருகே சாமல்பட்டி அருகே ஓடிக்கொண்டிருந்தபோது, அங்கு காசு கேட்டு வந்த திருநங்கைகளுடன் வாக்குவாதம் நடந்ததில், ஆத்திரமடைந்த ஒரு திருநங்கை, படியில் அமர்ந்து இருந்த சத்யநாராயணாவை காலால் எட்டி உதைத்தார். இதில் நிலைகுலைந்த சத்யநாராயணா, வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவரைக் காப்பாற்ற அவரது உறவினர் வீரபாபும் ரயில் இருந்து குதித்து உள்ளார். அவருக்கும் படுகாயம் ஏற்பட்டு. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்து திருநங்கை ஸ்வேதா என்பவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications