ஜெயலலிதா நலம்பெற வேண்டி அப்பல்லோ முன்பு திருநங்கைகள் பிரார்த்தனை
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று திருநங்கைகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என திருநங்கைகள் பூசனிக் காய்களை உடைத்து வேண்டினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 17 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு சர்வ சமயத்தினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இன்று முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஏராளமான திருநங்கைகள் பூசணிக்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், 5 நாள் சிறப்பு யாக வழிபாட்டின் 2ம் நாளான நேற்று முருகனுக்கு சிறப்பு யாகங்கள் மற்றும் ஆயுள்மந்த்ரா யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை, கலச பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ராமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம், போடியில் நந்தவன காளியம்மன் கோவில், மற்றும் முத்துமாரியம்மன் கோவில்களில், முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications