தேமுதிகவில் எல்.எல்.ஏ சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்த திருநங்கை
சென்னை: சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படுகிறது. கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார். சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ராதிகா என்ற திருநங்கை மனு கொடுத்தார்.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க, சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.,வில், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இதுவரை விருப்ப மனு அளித்துள்ளனர். தி.மு.க.,வில், 5 ஆயிரம் பேர்வரை விருப்ப மனு கொடுத்துள்ளனர். பாமகவில் 2500 பேர் வரை சீட் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தே.மு.தி.க.,வும், இன்று முதல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. விருப்ப மனு தாக்கல் மூலம், பரபரப்பை அரங்கேற்ற வேண்டும் என, விஜயகாந்த் விரும்புவதாகவும் இதற்காக, புதிய வியூகமும் வகுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்நாளான இன்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கோயம்பேடு அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர். பொது தொகுதிகளுக்கு ரூ.10 ஆயிரமும் தனி தொகுதிகளுக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணம் செலுத்தி மனு கொடுத்தனர்.

பெண்களும் ஆர்வமுடன் வந்து மனு கொடுத்தனர்.சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ராதிகா என்ற திருநங்கை மனு கொடுத்தார். மேலும் பல திருநங்கைகள் மனு கொடுக்க வந்திருந்தனர். ராதிகா கூறும்போது, கடந்த தேர்தலில் விஜயகாந்த் பெயரில் மனு செய்தேன். இந்த தேர்தலில் நான் மனு கொடுத்துள்ளேன். எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் வரலாற்றில் இடம் பெறுவோம். எங்கள் சமூகத்துக்கு அங்கீகாரமும் கிடைக்கும் என்றார்.

தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களும், மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், அக்டோபர் மாதம் நடக்கும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் மாவட்டச் செயலர்கள் மூலம், ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளாராம் விஜயகாந்த். இதனால் அதிமுக, திமுகவிற்கு நிகராக விருப்ப மனு அளிப்போர் எண்ணிக்கையை அதிகரித்து மாஸ் காட்டவேண்டும் என்று நினைக்கிறாராம் விஜயகாந்த். இன்று முதல் தினசரி மாலை 5 மணி வரை மனுக்கள் கொடுக்கலாம். வருகிற 14ம்தேதி வரை விருப்ப மனுக்கள் கோயம்பேடு அலுவலகத்தில் பெறப்பட உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications