குஷ்புவுக்கு எதிராக கொந்தளித்த திருநங்கைகள்.. சத்தியமூர்த்தி பவன் முற்றுகை
சென்னை: திருநங்கைகள் குறித்து அவதூறாக கருத்துக் கூறியதாக குஷ்புவை எதிர்த்து சென்னை சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஓட்டுரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் களமிறங்கவும் சில திருநங்கைகள் திட்டமிட்டுள்ளனர்.

சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் தேவி என்ற திருநங்கை சென்னை ஆர்.கே. நகரில் போட்டியிட உள்ளார். திருநங்கை ராதிகாவுக்கு சேலத்தில் வாய்ப்பு அளிப்பதாக தேமுதிக உறுதி அளித்திருக்கிறது. இதேபோல், திருநங்கை சுதா அதிமுகவில் வாய்ப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் மதுரையில் சுயேச்சையாக போட்டியிட்ட பாரதி கண்ணம்மா, அதன் பிறகு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தார். தற்போது அதிலிருந்து விலகிவிட்ட நிலையில், அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி சார்பில் போட்டியிட பாரதி கண்ணம்மாவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியொன்றில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு திருநங்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதாகத் தெரிகிறது. திருநங்கைகள் அரசியல் உரிமை கோரக்கூடாது என்ற கோணத்தில் அப்பேட்டியில் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
குஷ்புவின் இந்தப் பேச்சுக்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட, திருநங்கைகள் சுமார் 15 பேர் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு அதிமுகவில் வாய்ப்புக் கேட்டு மனு அளித்துள்ள சுதா என்ற திருநங்கை தலைமை தாங்கினார்.
திருநங்கைகளின் இந்தப் போராட்டத்தால் சத்தியமூர்த்தி பவனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications