போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 1,670 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில், சென்னை மாநகரத்தில் மட்டும் 1,670 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
தமிழக அரசு தேர்வாணையத்தால் நிரப்பப்படாத பிற துறை பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் விளம்பரப்படுத்தி நேரடியாகவும் தகுதியானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று சென்னை ஹைகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 746 டிரைவர்கள், 610 கண்டக்டர்கள், 261 தொழில்நுட்ப உதவியாளர்கள், 40 உதவி பொறியாளர்கள், 13 இளநிலை பொறியாளர்கள் உள்பட 1,670 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமும் பட்டியல் பெறப்பட்டுள்ளது. மேலும் நேரடியாகவும் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான விண்ணப்பங்கள் பல்லவன் சாலையில் உள்ள அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது. வருகிற 20 ஆம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ்












Click it and Unblock the Notifications