தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை! உடன்பாடு ஏற்படுமா?
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 13ம் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். இது காலதாமதமாகி வந்ததால் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர கோரி கடந்த மார்ச் 7ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதனால் தொ.மு.ச. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த மாதம் மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இது ஆளும் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி ஆகியோர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி அரசுப் போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்கிடையில் மதுரை ஹைகோர்ட்டு, தாமாக முன்வந்து, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை ஏன் இதுவரை வழங்கவில்லை என கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்கு வரும் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை இன்று சென்னை குரோம்பேட்டையில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை செயலாளர், 47 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பின்னர் தான், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க இயலும். என்று தெரிகிறது.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications