ஜெயலலிதா ஹெலிகாப்டர் இறங்குவதற்காக 16 மரங்கள் வெட்டிச்சாய்ப்பு: ரூ.7 லட்சம் அபராதம்
திருச்சி: திருச்சியில் இன்று பிரசாரம் செய்யும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், ஹெலிகாப்டர் தரையிறங்க, 'ஹெலிபேடு' அமைக்க, 16 மரங்களை வெட்டியதை கண்டித்து, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம், அ.தி.மு.க.,வுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் பொன்மலை ரயில்வே பணிமனை வளாகத்திற்கு அருகில் ரயில்வேக்கு சொந்தமான ஜி கார்னர் பகுதியில் நடைபெறுகிறது. அருகே ஹெலிகாப்டர் இறங்க வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 16 யூகலிப்டஸ் மரங்கள் வெட்டப்பட்டன. இதை பல கட்சிகளும் கண்டித்துள்ளன.

இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களுக்கு அபராதத் தொகை வசூலிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொன்மலை ஜி கார்னரில் பொதுக்கூட்டம் நடத்த நாள் ஒன்றுக்கு 3.5 லட்ச ரூபாய் வாடகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதிமுகவினர் 2 நாட்கள் அந்த பகுதியை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட ரயில்வே இடத்தில் எந்த சேதாரமும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக நாள் ஒன்றுக்கு 3.5 லட்ச ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 7 லட்ச ரூபாய் டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளது. சேதாரம் குறித்து விசாரித்த பின் டெபாசிட் தொகை 7 லட்ச ரூபாயினை அபராதமாக விதிப்பது பற்றி அறிவிக்கப்படும் என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications