Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உண்டு உறைவிட பள்ளி டூ ஃபேஷன் டிசைனிங்! சாதித்து காட்டிய கல்வராயன் மலைப்பகுதி பழங்குடியின மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த, உண்டு உறைவிட பள்ளியில் படித்த பழங்குடியின மாணவர்கள் இருவர் மத்திய அரசின் நிப்ட் (NIFT) எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டிசைன் கல்வி நிறுவனத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

ஒரு காலத்தில் உயர் கல்வி என்றால் பொறியியல், மருத்துவம் என்று மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்த பார்வை விரிவடைந்திருக்கிறது. குறிப்பாக ஃபேஷன் டெக்னாலஜி சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பேஷன் டிசைனிங் குறித்து பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதனை நான்கு வருட படிப்பாகவும், மூன்று வருட பி.எஸ்சி.படிப்பாகவும் படிக்கலாம்.

tribal students kalvarayan hill nift

குறிப்பாக Bachelor of Fashion Technology, Bachelor of Design என 2 இளநிலை பட்டப் படிப்புகள் ஐ.ஐ.டி. பொறியியல் கல்விக்கு இணையான மதிப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இது தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technology - NIFT) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படுகிறது.

NIFT என்பது மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் 16 முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இந்த கல்வி நிறுவனத்தில் படிப்பதன் மூலம் அதிக சம்பளத்துடன் கூடிய வேலையை பெற முடியும்.

ஆனால், இந்த கல்வி நிறுவனத்தில் சேர்வது அவ்வளவு சுலபமல்ல. பேச்சுலர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் GAT- General Ability Test தேர்வையும், பேச்சுலர் ஆஃப் டிசைன் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கூடுதலாக CAT - Creative Ability Test தேர்வையும் எழுத வேண்டும். கூடுதலாக, Quantitative ability, Communication ability, English comprehension, Analytical ability and logical ability, General knowledge and current affairs ஆகிய தலைப்புகளில் தயாராக வேண்டும்.

இந்த தேர்வுகளையெல்லாம் எழுதி அதில் வெற்றி பெற்று, பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒரு மாணவரும், மாணவியும் சென்னையில் உள்ள தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.

பொதுவாக ஃபேஷன் டிசைனிங் என்பது உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள், அரசாங்க வேலையை கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான படிப்பு என்று கருதப்பட்டு வந்த நிலையில், இம்மாணவர்கள் இக்கருத்தை உடைதெறிந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள மணியார்பாளையம் உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்று வந்த பழனியம்மாள் மற்றும் தவமணி ஆகியோர்தான் நுழைவு தேர்வில் வெற்றி பெற்று தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.

tribal students kalvarayan hill nift

பழனியம்மாள் மற்றும் தவமணியின் பெற்றோர்கள் இருவரும் விவசாய கூலி தொழிலாளியாவார்கள். இவர்களின் ஊதியம் அன்றாட உணவுக்கே போதுமானதாக இருப்பதில்லை. இருப்பினும் குழந்தைகளின் படிப்பை நிறுத்தாமல், அவர்களின் கல்விக்கு முடிந்தவரை உதவியுள்ளனர். இவர்களின் முயற்சி வீணாகவில்லை.

நுழைவுத் தேர்வு வெற்றி குறித்த பேசிய மாணவர்கள் இருவரும், தங்களின் தாவரவியல் ஆசிரியரின் வழிக்காட்டுதலின்படிதான் இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகவும், அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின் படி தேர்வெழுதியதால் வெற்றி பெற்றதாகவும் கூறியுள்ளனர். அதேநேரம் தங்களின் பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நுழைவு தேர்வு எழுதி வெற்றி பெற்று அதில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்திருப்பது, கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+