திருச்சியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்– 5 பேர் பரிதாப பலி
திருச்சி: திருச்சி அருகே பஞ்சப்பூரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலியான 5 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் மேலும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். குடும்பத்துடன் கும்பகோணத்தில் வசித்து வரும் இவர் குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
காரை ரமேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்தக் கார் பஞ்சப்பூர் அருகில் இன்று அதிகாலை 1 மணியளவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது.
அச்சுவரை தாண்டிச் சென்ற கார், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி செய்திப் பத்திரிகை கொண்டு சென்ற மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கண்ணன், அவரது மகன் ராஜ்குமார், மாமனார் வெங்கடசாமி, உறவினர் மாடசாமி, எதிரில் வந்த காரில் அமர்ந்திருந்த பிரதீப் உட்பட 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கண்ணன் மனைவி விஜயலட்சுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு கார் டிரைவர்களான ரமேஷ், நாகராஜன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications