புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளரை சுட்டுப் பிடிக்க உத்தரவு.. சென்னை, பெரம்பலூரில் பரபரப்பு!
பெரம்பலூர்: புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வெள்ளையன் என்பவரை சுட்டுப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் என்கவுண்டர் செய்யப்படும் அபாயம் உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் வெள்ளையன். இவர் மீது கொலை, கொள்ளை, மிரட்டல், பணம் பறித்தல், கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என பல வழக்குகள் மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோர்ட்டுகள் பலமுறை வாரண்ட் பிறப்பித்தும் கூட அவர் ஆஜரவாவதில்லை. இந்த நிலையில் வழக்குகள் தொடர்பாக அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். ஆனால் கடந்த 20 நாட்களாக அவரைக் காணவில்லை. தலைமறைவாகி விட்டார். சென்னையில் ஒரு முக்கிய இடத்தில் அவர் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அவர் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படும் இடத்தை ரெய்டு செய்து அவரைப் பிடிக்க முடியாத நிலையில் போலீஸார் உள்ளதாக தெரிகிறது. மீறிப் பிடிக்கப் போனால் பிரச்சினை வரலாம் என்றும் போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் அவரை உயிருடனோ அல்லது தேவைப்பட்டால் பிணமாகவோ பிடிக்குமாறு திருச்சி சரக டிஐஜி செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனால் பெரம்பலூர் மற்றும் சென்னையில் உள்ள புதிய பாரதம் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications