திருச்சி கைதி புனேவில் தப்பியோட்டம்- "மூச்சா" போவதாக கூறி விட்டு எஸ்கேப் ஆனார்!
திருச்சி: திருச்சியில் இருந்து புனேவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் அங்கிருந்து ரயிலில் திரும்பும் போது இன்று காலை திடீரென்று தப்பி ஓடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபரின் பெயர் தவமணி. இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளை புனேவில் வைத்து போலியாக அச்சடித்து தமிழகத்தில் புழக்கத்தில் விட்டதாக புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டவர். இதுதொடர்பான வழக்கு புனேவில் நிலுவையில் உள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் இவர் மீது கொலை உள்ளிட்ட 5 வழக்குகளும் உள்ளன. இது தொடர்பாக இவர் திருச்சி சிறையில் கடந்த 2 வருடமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் புனே வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை முடிந்து திரும்பிய நிலையில்தான் போலீசாரின் கண்களில் மண்ணைத்தூவும் வகையில் கனநேரத்தில் தப்பி ஓடியுள்ளார் கைதி தவமணி.
வழக்கு விசாரணை முடிவடைந்து சோலாப்பூர் - குல்பர்கா மின்சார ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் ரயில் வேகம் குறைந்துள்ளது. அச்சமயத்தில் பாத்ரூம் செல்வதாக கூறிச் சென்ற தவமணி, திடீரென்று வெளியில் குதித்து ஓடிவிட்டார். தற்போது அவரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications