பேய் பிடித்ததாக கூறப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- போலீஸ் விசாரணை
திருச்சி: பேய் பிடித்ததாகக் கூறப்பட்ட இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூரை அடுத்த சின்னப்பள்ளி பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன்-மஞ்சுளா தம்பதியினரின் 19 வயது மகள் வினோதினி. 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்த வினோதினியின் நடவடிக்கையில் சமீபகாலமாக மாற்றம் காணப்பட்டுள்ளது.

சம்பந்தமே இல்லாமல் தானாக பேசி, சிரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தார் வினோதினிக்கு பேய் பிடித்ததாகக் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வினோதினியை பல இடங்களுக்கு பேய் விரட்ட அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தவிர வீட்டிலும் மந்திரவாதிகளை அழைத்து வினோதினிக்கு பிடித்திருந்த பேயை விரட்ட பூஜைகள் நடத்தியுள்ளனர். மேலும், வினோதினிக்கு பிடித்திருந்த பேய்களில் 16 தோஷங்கள் கழிந்து விட்டதாகவும், இருப்பினும் தீக்குளித்து இறந்த ஒரு பெண்ணின் ஆவி மட்டும் தங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று மாரியப்பன் வியாபாரத்திற்காக வெளியில் சென்று விட, மஞ்சுளா சமையலுக்கான விறகுகளை வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் வினோதினியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து மஞ்சுளா வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே உடல் முழுவதும் கருகிய நிலையில் வினோதினி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டுப்புத்தூர் போலீசார், வினோதினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தார் கூறுகையில், வினோதினிக்கு பேய் பிடித்ததால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பேய் பீதியில் அவர் தீக்குளித்து இறந்து போனதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications