கூடங்குளம் அணு உலைக்கு சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..சாலையில் சிதறிய சிலிண்டர்கள்.. பரபரத்த நெல்லை
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 180 ஹைட்ரஜன் வாயு சிலிண்டர்களுடன் வந்துகொண்டிருந்த லாரி ஒன்று நெல்லை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்து சிலிண்டர்கள் அனைத்தும் சாலையில் உருண்டு ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. இந்த அணு மின் நிலையத்திற்கு தேவையான பொருட்கள் அவ்வப்போது கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கூடங்குளம் அணும் மின் நிலையத்திற்கு தேவையான ஹைட்ரஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

விபத்துக்குள்ளான லாரி
லாரியானது தலா 43 கிலோ எடை கொண்ட 180 ஹைட்ரஜன் வாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு கூடங்குளத்துக்கு புறப்பட்டது. இந்த லாரி நெல்லை -கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் ஐ.ஆர்.டி பாலிடெக்னிக் கல்லூரி அருகே லாரி வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஒருபக்கமாக கவிழ்ந்ததில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சிலிண்டர்கள் சாலை முழுவதும் உருண்டு ஓடின.

முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை
இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளான தகவல் தீ அணைப்பு போலீசாருக்கு கொடுக்கப்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஹைட்ரஜன் சிலிண்டர்கள் தீ பிடித்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலிண்டர்கள் மீது தண்ணீர் ஊற்றி குளிர்வித்தனர்.

வாயு வெளியேறுகிறதா?
பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சிலிண்டர்கள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதனால், நான்கு வழிச்சாலையில் போக்குரத்து நிறுத்தப்பட்டு பக்கவாட்டு சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அணுமின் நிலையத்திற்கு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்த தகவல் அறிந்து அணு நிலையத்தில் இருந்து தீ அணைப்பு அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். சிலிண்டர்களில் இருந்து வாயு வெளியேறுகிறதா என ஆய்வு கருவி முலம் ஆய்வு செய்து சிலிண்டர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தினர்.

வேறு லாரி மூலமாக
இதன்பிறகு வேறு லாரி மூலம் சிலிண்டர்கள் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நான்கு வழிச்சாலையில் கூடங்குளத்திற்கு ஹைட்ரஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளாகி சாலையில் சிலிண்டர்கள் சிதறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications