பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்தபோவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் வார்னிங்
தமிழக அரசு திடீரென வாட் வரியை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக அரசு திடீரென வாட் வரியை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதை திரும்ப பெறாவிட்டல் மாநிலம் தழுவிய போரட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு டிப்பர்லாரி உரிமையாளர்கள் நலச்சம்மேளனத்தின் தலைவர் டி.ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல் , டீசலின் வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசுகளும், டீசல் ஒரு லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசுகள் உயர்ந்துள்ளது.
டீசல் உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
அதுமட்டுமில்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை விலை நிர்ணயம் செய்து உயர்த்துகிறார்கள். மேலும் பழைய 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது முதல் எங்களின் தொழில் முடங்கிகிடக்கிறது.
எனவே தமிழக அரசு இன்று இரவுக்குள் வாட் வரி உயர்வை திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தபோவதாக திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications