திருடச் சென்ற வீட்டில் ஆம்லேட் போட்டு சாப்பிட்ட பலே திருடர்கள் !
சென்னை: புது வண்ணாரப்பேட்டையில் திருடச் சென்ற வீட்டில் நகையும், பணமும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் சமையல் அறையில் புகுந்து ஆம்லேட் போட்டு சாப்பிட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜு (45). இவர் குடும்பத்தோடு கடந்த 21-ந்தேதி வேளாங்கண்ணிக்கு சென்றார். நேற்று காலையில் வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. சமையல் அறையிலும் பாத்திரங்கள் சிதறி கிடந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என நினைத்த ராஜூ, பணம் மற்றும் நகைகளை ரகசியமாக மறைத்து வைத்திருந்த இடத்தை பார்த்தார்.
ஆனால் நகை பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. மாறாக கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முட்டையை எடுத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. மேலும் .பிரிட்ஜில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்ட கொள்ளையர்கள் அதில் இருந்த மீதி பழங்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டு அள்ளிச் சென்றனர்.
இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்ற ராஜு, 5 பவுன் நகையை ஒரு இடத்திலும், ரூ.7 ஆயிரம் ரொக்கப் பணத்தை இன்னொரு இடத்திலும் ரகசியமாக மறைத்து வைத்து விட்டு சென்றிருந்தார். இதனால் அந்த நகையும், பணமும் தப்பியது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications