கோர்ட் தடையால் கைதில் இருந்து எஸ்கேப்...தெம்போடு திருச்சியில் திறந்தவெளி ஜீப்பில் பவனி வந்த தினகரன்
டிடிவி தினகரனை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ள நிலையில் அதே தெம்போடு திறந்த வெளி ஜீப்பில் பவனி வந்தார் டிடிவி தினகரன்
Recommended Video

திருச்சி: திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்று பேச திறந்த வெளி ஜீப்பில் ஊர்வலமாக வந்தார் டிடிவி தினகரன்.
அதிமுகவின் திருச்சி எம்.பி ப.குமார் எம்.பி அளித்த புகாரின் பேரில் திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை தினகரனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் ஹைகோர்ட் கிளை தினகரனை கைது செய்ய இடைக்கால விதித்தது.

இந்த தெம்போடும், புதிய உற்சாகத்தோடும் டிடிவி தினகரன் திருச்சியில் நடைபெறும் நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் உற்சாகமாக பங்கேற்றுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி உழவர் சந்தையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் குவிந்ததுள்ளனர்.
See The crowd visuals.. #TTVDhinakaran #neetprotest pic.twitter.com/Ypu0cBTBsz
— Manoj Prabakar S (@imanojprabakar) September 19, 2017
இந்த பொதுக்கூட்டம் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கு அனுமதி தர மாநகராட்சி மறுத்து விட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின அனுமதியோடு இன்றைய நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications