கூர்க் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்களை போலீஸ் மிரட்டுகிறது... டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூர்க் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்களை போலீசார் மிரட்டுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக காவல்துறையை அனுப்பி கூர்க் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிரட்டுகின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

TTV Dinakaran accuses that Police threatening our MLAs in Coorg

பொய் வழக்கு போடுவோம் என்று கூறி எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மிரட்டுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியின் ஆயுள் முடியப் போகிறது என்பதை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் நன்கு அறிவார்கள் என்றும் அவர் கூறினார். கட்சியை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran says that Police threatening our MLAs in Coorg. Police threatens false case will be filed on the MLAs he said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற