காவிரி வாரியம்: டிடிவி தினகரன் சார்பில் தொடர் போராட்டம் அறிவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காவிரி கரையோர மாவட்டங்களில் தொடர் போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் பன்னெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இதை மத்தியில் உள்ள அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதும் இல்லை, கர்நாடக அரசு ஒத்துழைப்பு அளிப்பதும் இல்லை.
இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அரசியல் அமைப்புகளும், விவசாயிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

விவசாயிகள் முற்றுகை
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகளும், டிடிவி தினகரனும் முற்றுகையிட்டனர்.இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

கடையடைப்பு
திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு போராட்டங்களை நடத்தி மத்திய அரசுக்கு எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு அழுத்தத்தை அரசியல் கட்சிகள் கொடுத்து வருகின்றன.
|
தொடர் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காவிரி கரையோர மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடத்த டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகையில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ தலைமையில் வரும் 07.04.2018 முதல் 27.04.2018 வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

எப்போது
டிடிவி தினகரன் தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உல்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கட்சியினரும், மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications