எடப்பாடி பழனிச்சாமியை தமிழகம் மன்னிக்காது.. டிடிவி தினகரன் காட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் பழனிச்சாமி அரசை வன்மையாக கண்டிப்பதாக டிடிவி. தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவை நீக்கி நேற்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து தமிழகத்தின் சலி பகுதிகளில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உருவபொம்மையை எறிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தனது ஆரவாளர்கள் கைது குறித்து டுவிட்டர் டிடிவி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 TTV Dinakaran condemns EPS for arresting their supporters

டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நேற்று துரோகிகள் ஒன்று கூடி பொதுக்குழு என்ற பெயரில் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக, எதிராக ஒரு கூட்டத்தை கூட்டி சின்னம்மாவை பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். காவல்துறையை ஏவி உண்மை தொண்டர்களை கைது செய்து வருகின்றனர்.

இதனைக் கேட்டு கொதித்தெழுந்த கழகத்தின் உண்மை தொண்டர்கள் தமிழகம் முழுவதும் துரோகிகள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மைகளை கொளுத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அதிமுகவின் ஆணிவேரான தொண்டர்களை அசைத்து பார்க்க முயற்சித்தால் தமிழகம் நிச்சயம் உங்களை மன்னிக்காது.

கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் பழனிச்சாமி அரசை வன்மையாக கண்டிக்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran condemns CM Palanisamy, that his supporters who fired the effigys of EPS and OPS were arrested and also demanding their release.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற