ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ தேசிகருக்கு டிடிவி தினகரன் இரங்கல்
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ தேசிகருக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஸ்ரீரங்க ராமானுஜ தேசிகருக்கு டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்க ராமானுஜ தேசிகர். இவர் தமிழாசிரியராக இருந்தார். தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தார்.

இவர் பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியுள்ளார். அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை மயிலாப்பூரில் உள்ள மடத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் இன்று மாலை சென்னையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தினுடைய சுவாமிகள், ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் அவர்கள் வைகுண்ட பதவி அடைந்தார் என்பதை அறிந்து வருத்தமுற்றேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 19, 2018
அவரது இறுதி சடங்குகள் நாளை மேலூரில் நடைபெறும் என்று மடத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தினுடைய சுவாமிகள், ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் அவர்கள் வைகுண்ட பதவி அடைந்தார் என்பதை அறிந்து வருத்தமுற்றேன்.
தமிழ் மொழியின் மீது பெரும் பற்றுக்கொண்டவராகவும், கல்விப் பணியையும், ஆன்மிகப் பணியையும் சிறப்போடு முன்னெடுத்த ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தினுடைய சுவாமிகளின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications