வீடியோவை ஏன் வெளியிட்டோம்?... உண்மையை போட்டு உடைத்த சி.ஆர். சரஸ்வதி!
மக்கள் மத்தியில் உண்மையை உணர்த்துவதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக டிடிவி. தினகரன் தரப்பை சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதா மரணம் குறித்தே முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வந்ததாலேயே மக்கள் மத்தியில் உண்மையை உணர்த்துவதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக டிடிவி. தினகரன் தரப்பை சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி வீடியோ வெளியிடப்பட்டது குறித்து கருத்து கூறுகையில் : ஓராண்டுக்கு முன்னரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும் இதே சர்ச்சை தான் எழுந்திருக்கும். சசிகலா பற்றி பலரும் அவதூறாக பேசிய போதே இந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அப்போது அவர் மறுத்துவிட்டார், யாரிடமும் ஜெயலிலதாவை இந்த கோலத்தில் காட்ட விரும்பவில்லை என்று சசிகலா கூறி இருந்தார்.

விசாரணைக் கமிஷனிடம் இந்த ஆதாரங்களை நாங்கள் கொடுக்கத் தான் போகிறோம். கடந்த 15 நாட்களாகவே தேர்தல் களத்தில் ஆளும் கட்சியினர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டு வாக்கு சேகரிக்கவில்லை. தொடர்ந்து மக்கள் மத்தியில் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களையே விதைத்து வந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்பும் அனைவருமே அன்று மருத்துவமனையில் இருந்தவர்கள் தான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்களுக்கு தெளிவை கொடுக்கவுமே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம்.
75 நாட்கள் ஜெயலலிதாவை மருத்துவமனையில் வைத்து பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. லண்டனில், சிங்கப்பூரில் இருந்து மருத்துவர்கள் வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வீடியோ உண்மையான வீடியோ, இதை நாங்கள் நீதிமன்றத்திலும் கொடுப்போம். சிபிஐ விசாரணை வைத்தால் கூட எங்களுக்கு சவுகரியமாகத் தான் இருக்கும் என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications