பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களை நான் இயக்கவில்லை... தேர்தல் ஆணையத்தில் டிடிவி.தினகரன் விளக்கம்!
சமூக வலைதளங்களில் இரட்டை இலைச்சின்னத்தை பயன்படுத்துவதாக எழுந்த புகாரில் டிடிவி.தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: சமூக வலைதளங்களில் இரட்டை இலைச்சின்னத்தை பயன்படுத்துவதாக எழுந்த புகாரில் டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்தில் இன்று கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் பேஸ்புக், டிவிட்டர் வலைத்தளங்களை தான் இயக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
டிடிவி.தினகரன்தான் இரட்டை இலைச்சின்னத்தையும் கட்சியையும் தவறாக பயன்படுத்துவதாக அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டிடிவி.தினகரனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதுதொடர்பாக தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வின் இரு அணிகளும் தங்களின் வலைத்தளம், முகநூல், டுவிட்டர் பக்கங்களில் பயன்படுத்துவது தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் செயல்.

வாக்காளர்களை குழப்பும் செயல்
மேலும் வாக்காளர்களுக்கு தவறான தகவல்களை தருதல் அல்லது வாக்காளர்களை குழப்பும் வகையில் தகவல்களை அளித்தல் ஊழல் தொடர்பான செயலாகும். எனவே, பிரசாரங்களிலோ அல்லது வலைத்தளம், முகநூல், டுவிட்டர் பக்கங்களிலோ இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

தினகரன் கடிதம் மூலம் விளக்கம்
இதுதொடர்பாக 6ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் கமிஷனுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை தனது அணி வழக்கறிஞர்கள் மூலம் டிடிவி தினகரன் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கடிதம் மூலம் விளக்கமளித்தார்.

நான் பயன்படுத்தவில்லை
அதில் தான் இரட்டை இலைச்சின்னத்தை பயன்படுத்தவில்லை என மறுப்பு தெவித்துள்ளார். மேலும் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட வலைதள பக்கங்களை தான் இயக்கவில்லை என்றும் டிடிவி.தினகரன் தனது விளக்கக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பணப்பட்டுவாடா - கைது
ஏற்கனவே டிடிவி.தினகரன் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்கே.நகரில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பல்வேறு கட்சியினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த தினகரன் தரப்பினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications