டிடிவி தினகரனுக்கு ஜாமீன்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய ஆதரவாளர்கள்
சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிறையில் உள்ள டிடிவி தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற புரோக்கர் மூலம் லஞ்சம் தர முயன்றதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஏப்ரல் 26ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினகரனுக்கு உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைதாகினார்.

இதையடுத்து டெல்லி திஹார் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று திஸ் ஹசாரே நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் மீதான இருதரப்பு வாதங்களும் முடிந்து விட்ட நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பூனம் சவுத்ரி, டிடிவி. தினகரன், மல்லிகார்ஜூனா இருவருக்கும் ஜாமீன் அளிப்பதாக கூறினார். இருவரும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினகரனுக்கு ஜாமீன் கிடைத்த செய்தி அறிந்த அவரது ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதேபோல் தஞ்சை, தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications