இந்திய இறையாண்மைக்கு எதிராக துண்டுபிரசுரம்-சேலத்தில் தினகரன் மீதும் வழக்கு- எந்த நேரத்திலும் கைது?
சேலத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகித்த வழக்கில் தினகரன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
சேலம்: இந்திய இறையாண்மைக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகித்த வழக்கில் தினகரன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
சேலத்தில் சமூகநீதி பாதுகாப்பு என தினரகன் தரப்பினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

இதுதொடர்பாக இந்தியா இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக தினகரன் ஆதரவாளரான கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட 36 பேர் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக துண்டுபிரசுரம்-சேலத்தில் தினகரன் மீதும் வழக்கு- எந்த நேரத்திலும் கைது? https://t.co/nidqx8MH5L #TTVDinakaran pic.twitter.com/pQ60QGpoad
— Oneindia Tamil (@thatsTamil) October 2, 2017
இந்நிலையில் இந்த வழக்கில் டிடிவி தினகரனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications