மூக்குப்பொடி சித்தரை நாடி ஓடிய தினகரன்... ஏன்?
மூக்குப்பொடி சித்தரை சந்தித்து தினகரன் ஆசி பெற்றார்.
திருவண்ணாமலை: இடைத்தேர்தல்கள், திமுக-அதிமுக கூட்டங்கள், என அரசியல் களம் பரபரப்பான சூட்டில் இருக்க, டிடிவி தினகரனோ, திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி வாங்கி வந்திருக்கிறார்.
இந்த மூக்குப்பொடி சித்தர் யார்? இவரது பெயர் இதுவரை யாருக்குமே தெரியாது. வயது 90-க்குமேல் ஆகிறது. இவருக்கென்று நிரந்தரமான இடம் என்று ஒன்று இல்லை. அடிக்கடி திருவண்ணாமலை கிரிவல பாதையில் தென்படுவார். எப்பவுமே மூக்குப்பொடி போட்டுக் கொள்வார். மூக்குப் பொடி சித்தர் எவ்வளவுதான் ஃபேமஸ் ஆனாலும், பொன், பொருள் மீதெல்லாம் ஆசை கிடையாது.

தீவிர பக்தர்கள்
எந்த வசதியையும் விரும்ப மாட்டார். இவரை பார்த்து ஆசி பெறுவதற்காக பெரிய பெரிய விஐபிக்கள் தட்டில் பணக்கட்டுடன் காத்து கிடந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டார். இவர் கண்களை திறந்தாலே ஆசிதான், கையை தூக்கினாலும் ஆசிதான், திட்டினாலும் ஆசிதான்.. இன்னும் பல வித்தியாச, அரிதான குணங்களை உடைய இந்த மூக்குப்பொடி சித்தருக்கு புதுச்சேரி ரங்கசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இவரது தீவிர பக்தர்கள்.

ஆசி பெறும் டிடிவி
டிடிவி தினகரன் இவரை அடிக்கடி சந்தித்து ஆசி பெற்று வருவார். எடப்பாடி பழனிசாமியும்-தினகரன் இடையே பிளவு ஏற்பட்டு கிடந்தபோதுகூட இவரிடம் வந்துதான் தினகரன் ஆசி பெற்று சென்றார். இந்நிலையில் மூக்குப்பொடி சித்தர் தற்போது கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்ரி ஆஸ்ரமத்தில் சில காலம் தங்கியிருக்கிறார்.

தியானத்தில் தினகரன்
அவரை நேற்று தினகரன் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். காரணம் நேற்று பவுர்ணமி தினம் ஆகும். அவரிடம் தினகரன், ஆசி பெற்றதுடன், மேலும், தரையில் கால் மீது கால் போட்டபடி படுத்திருக்கும் மூக்குப்பொடி சித்தரின் அருகில் அமர்ந்து, சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

18 எம்எல்ஏக்கள் வழக்கு?
18 எம்எல்ஏக்களின் தீர்ப்பு இன்னமும் இழுபறியாகவே உள்ளது. அதற்கு ஒரு முடிவும் கிடைக்காமல் தாமதமாகி கொண்டே வருகிறது. இந்தநிலையில், வழக்கின் தீர்ப்பு தனக்கு சாதகமாக வருவதற்காகக்கூட தினகரன் சித்தரை சந்தித்து ஆசி பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications