தினகரன் டங்க் ஸ்லிப்பாகி 420 என்று கூறிவிட்டார்.. சப்பைக்கட்டு கட்டும் திண்டுக்கல் சீனிவாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: டிடிவி தினகரன் வாய்த்தவறி முதல்வரை 420 என்று கூறிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

டிடிவி தினகரனின் நியமனம் செல்லாது என எடப்பாடி அணியினர் அதிமுக தலைமைக் கழகத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றினர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு 420 என்றும் போர்ஜரியாக பேசுகிறார் என்றும் வசைப்பாடினார். மேலும் அவர் ஒரு ஏமாற்று பேர்வழி என்றும் தேர்தல் ஆணையத்தில் ஒன்றும் மக்கள் மன்றத்தில் ஒன்றும் பேசி வருகிறார் என்றும் சாடினார்.

தினகரனுக்குதான் பொருந்தும்

தினகரனுக்குதான் பொருந்தும்

இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தினகரன் 420 என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி 420 என்பது தினகரனுக்குதான் பொருந்தும் என்றார்.

அண்ணன் தம்பி சண்டைதான்

அண்ணன் தம்பி சண்டைதான்

தமிழக அரசியலில் முக்கிய இடத்தில் இருக்கும் இருவரும் மாறி மாறி 420, ஃபோர்ஜரி என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவில் நடைபெறுவது அண்ணன் தம்பி சண்டைதான் என்றார்.

திவாகரன் திருத்திக்கனும்

திவாகரன் திருத்திக்கனும்

திவாகரன் பேசுவதை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார். முதல்வரை 420 என தினகரன் வாய்த்தவறி திட்விட்டதாகவும் சப்பைக்கட்டு கட்டினார்.

ஓபிஎஸ்க்கு துணை முதல்வரா?

ஓபிஎஸ்க்கு துணை முதல்வரா?

மேலும் தினகரனை முதல்வர் 420 எனக்கூறியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி என ஊடகங்கள்தான் சொல்கின்றன என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran mistakenly told that Edappadi palanisami is a 420 Minister Dindugul Srinivasan said. ADMK fight is brothers fight He said.
Please Wait while comments are loading...