அமைச்சர்கள் சிலர் சப்தமாக பேசியது உண்மையே.. வாக்குவாத பஞ்சாயத்தை கமுக்கமாக ஒப்புக் கொண்ட தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மூத்த அமைச்சர்கள் தமது வீட்டில் இன்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்பதை பூடகமாக ஒப்புக் கொண்டார் டிடிவி தினகரன்.

அதிமுகவின் இரண்டு அணிகளும் 'ஏதோ' ஒன்று நடக்கப் போகிறது என பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் எப்போது வேண்டுமானாலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.

தினகரன் பதவிக்கு ஆபத்து

தினகரன் பதவிக்கு ஆபத்து

அதேபோல தினகரன் தொடர்ந்து வாலாட்டினால் ஃபெரா வழக்குகளில் உள்ளே போக நேரிடும்; அல்லது எடப்பாடி, தம்பிதுரை கோஷ்டியே தினகரனை பதவியில் இருந்து நீக்கிவிடும் என கூறப்படுகிறது.

தினகரன் பதவிக்கு ஆபத்து

தினகரன் பதவிக்கு ஆபத்து

அதேபோல தினகரன் தொடர்ந்து வாலாட்டினால் ஃபெரா வழக்குகளில் உள்ளே போக நேரிடும்; அல்லது எடப்பாடி, தம்பிதுரை கோஷ்டியே தினகரனை பதவியில் இருந்து நீக்கிவிடும் என கூறப்படுகிறது.

குவிந்த அமைச்சர்கள்

குவிந்த அமைச்சர்கள்

இந்த நிலையில் தினகரனின் வீட்டில் இன்று தம்பிதுரை தலைமையில் ஏராளமான அமைச்சர்கள் குவிந்துவிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பம்மிய தினகரன்

பம்மிய தினகரன்

இச்சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ரொம்பவே பம்மித்தான் பேசினார். தமக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல அமைச்சர்கள் வந்தார்கள்; விவாதித்தோம் என்றார்.

ஒப்புதல் வாக்குமூலம்

ஒப்புதல் வாக்குமூலம்

பின்னர் சிலநேரங்களில் சப்தமாக சிலர் பேசியிருக்கலாம்.. அதெல்லாம் விவாதம்தான்.. அப்படித்தான் இருக்கும் என்றும் சமாளித்தார். அமைச்சர்கள் பலர் தினகரனுக்கும் விஜயபாஸ்கருக்கும் எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் வீட்டில் சப்தமாக பேசினார்கள்... ஆனால் வாக்குவாதம் இல்லை என ஒப்புதல் வாக்குமூலமே தந்துவிட்டார் தினகரன்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK(Amma) Deputy General secretary TTV Dinakaran accepts some seniors Minister's revolt with in the Party.
Please Wait while comments are loading...