நான் காந்தியின் பேரன் இல்லை.. ஆனா நீங்க யாரு?... "திக் திக்"குக்கு மத்தியிலும் தினகரன் "தில்"!
நான் காந்தியின் பேரன் இல்லை, சாதாரண மனுஷன்தான் என்று தினகரன் கூறியுள்ளது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
Recommended Video

சென்னை: நான் காந்தியின் பேரன் இல்லை என்று கூறியுள்ள டிடிவி தினகரன் மற்றவர்கள் யார் என்றும் கேட்டு அதிர வைத்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் கடந்த 3 நாள்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தினகரன் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் கூறி வருகின்றனர்.
அதிகாரிகள் பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அங்கு சாணியும், உரமும் தான் இருக்கும் என்று தினகரன் நக்கலடித்தார். ஆனால் அங்கு ரகசிய அறைகள் இருப்பதாக சோதனையில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

இல்லவே இல்லை
3 நாள்களாக நடைபெற்று வரும் சோதனை குறித்து டிடிவி தினகரன் கூறுகையில் எனது புதுவை பண்ணை வீட்டில் ரகசிய அறைகள் உள்ளதாக கூறப்படுவது பொய்யான தகவலாகும். சேகர் ரெட்டியை உருவாக்கியவர்கள் வீட்டில் ஏன் சோதனையில்லை.

பெரிய சோதனை
கடந்த 3 நாள்களாக தொடரும் இந்த மெகா சோதனை ஏன் என்று தெரியவில்லை. 1800 அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை என்பதெல்லாம் தவறான தகவலாகும். நாங்கள் பெரிய கட்சி இல்லை.

சாதாரண மனிதன்
நான் காந்தியின் பேரன் இல்லை. சாதாரண மனிதன்தான். அதேசமயம், என் மீது குற்றம்சாட்டுபவர்கள் என்ன காந்தியின் பேரன்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

யார் யோக்கியம் என்கிறார்
சேகர் ரெட்டியை உருவாக்கியவர்கள் வீட்டில் ஏன் சோதனை இல்லை என்றால் அவர் ஓ.பன்னீர் செல்வத்தை குறிப்பிடுகிறார். மேலும் தான் காந்தியின் பேரன் இல்லை என்றால் தானும் தவறுகளை செய்துள்ளேன் என்பதை தினகரனே மறைமுகமாக ஒப்புக் கொள்கிறாரா. மேலும் குற்றம் சுமத்துபவர்கள் காந்தியின் பேரன்களா என்ற கேள்வி ரெய்டை ஏவிவிட்டதாக கூறப்படும் பாஜகவினரை மறைமுகமாக தாக்குகிறாரா அல்லது மத்திய அரசுக்கு இணக்கமாக இங்குள்ளவர்களை சுட்டிக் காட்டுகிறாரா என்று தெரியவில்லை.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications