அமைச்சர் ஜெயக்குமார் "பஃபூன்" மாதிரி பேசிக் கொண்டிருப்பார்... தினகரன் விமர்சனம்!
அமைச்சர் ஜெயக்குமார் பஃபூன் மாதிரி பேசிக் கொண்டிருப்பார் என தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.
நெல்லை: அமைச்சர் ஜெயக்குமாரை பஃபூன் என்று கடுமையாக சாடி பேட்டி கொடுத்துள்ளார் டிடிவி தினகரன்.
நெல்லையில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுடன் பேசியதாவது : நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் அறிவித்த போராட்டம் குறித்து சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
ஆளுநரை சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆதரவை திரும்பப்பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளோம். ஆளுநர் பொறுத்திருக்கச் சொல்லியிருக்கிறார், நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கிறோம். ஜனநாயக நாட்டில் எதையுமே பொருத்திருந்து தான் பெற முடியும்.

முதல்வரை மாற்ற வேண்டும்
என்னை விட்டுவிட்டு 21 பேருடனும் எதிர்அணியினர் பேசுவார்கள். அமைச்சர் ஜெயகுமார் பஃபூன் போல ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார், முதல்வரை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. எங்கள் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள், தொகுதி மக்களுடனும் அவர்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

மக்கள் எதிராக உள்ளனர்
அமைச்சர்களுக்கு எதிராக மக்களும், தொண்டர்களும் உள்ளனர். அனிதா மரணத்திற்கு இவர்களால் செல்ல முடியவில்லை இதில் இருந்தே அவர்கள் மீது மக்கள் எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது தெரியும்.

கட்சியிலே துரோகிகள்
யாரை முதல்வராக்கினோமோ அவரே கட்சிக்குத் துரோகம் செய்யும் போது அடுத்தவர்களை குறை சொல்வது தவறு. அமைச்சர்களே கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு பதவி இருந்தால் போதும் என்று இருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது மற்றவர்களால் தான் அவர்கள் கெட்டுவிட்டார்கள் என்று சொல்வது தவறு.

பணம் பாய்ந்துள்ளது
கடந்த 4 மாதமாக ஜக்கையன் எங்களுடன் தான் இருந்தார். அவருடைய திடீர் மனமாற்றம் என்னவென்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications