ஆர்கே நகரில் வாகை சூடினார் டிடிவி தினகரன்.. ஆதரவாளர்கள் குத்தாட்டத்துடன் கொண்டாட்டம்!
ஆர்கே நகர் இடைத்ததேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்ததேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். தமிழக இடைத்தேர்தல் வரலாற்றிலேயே சுயேச்சை வேட்பாளர் அபார வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்குகளைவிட அதிகம் பெற்று டிடிவி தினகரன் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தினகரனின் வெற்றியை அவரது தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆர்கே நகர், டிடிவி தினகரனின் வீட்டின் முன்பு மற்றும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அவரது ஆதராவாளர் பேன்ட் வாத்தியம் முழங்க குத்தாட்டம் போட்டனர். இனிப்புகள் வழங்கியும் வெடிகளை வெடித்தும் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தினகரனுக்கு புகழந்தும் அவர்கள் முழக்கமிட்டனர். இதேபோல் அவரது சொந்த ஊரான மன்னார்குடியிலும் ஆதரவாளர்கள் வெடிகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications