டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 20 பேர் குற்றாலத்தில் முகாம்.. 2 பேர் வரவில்லை
Recommended Video

நெல்லை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் என மொத்தம், 20 பேர் குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர்.
தினகரனின் தீவிர ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்கதமிழ்செல்வன் மேற்பார்வையில் இவர்கள் குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

ஆண்டிப்பட்டி தங்கதமிழ் செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன், பெரியகுளம் கதிர்காமு, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், மானாமதுரை மாரியப்பன் கென்னடி, கள்ளகுறிச்சி பிரபு, ஒட்டப்பிடாரம் சுந்தர்ராஜ் ஆகியோர் நேற்று இரவு வந்தனர்.
இன்று காலை நிலவரப்படி, தங்கள் ஆதரவாளர்கள் 20 பேர் அங்கு முகாமிட்டுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இன்னும் இருவர் வர வேண்டி இருப்பதாகவும் அவர்கள் விரைவில் வந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இன்னும் 2 தினங்கள் குற்றாலத்தில் தான் தங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியின்போது, குற்றாலத்தில் குளிக்க செல்வதாகவும் அதன்பிறகு இரவு அங்கேயே தங்க வேண்டி இருக்கும். இதன் பின்னணியில் எதுவுமில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் நாளை தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர்கள் குற்றாலத்தில் அதுவரை தங்கி இருப்பார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இன்று தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில் இன்னும் இரு நாட்கள் தங்கி இருக்கப் போவதை ஊர்ஜிதம் செய்து விட்டார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications